×

ஹெல்மெட் அணியாவிட்டால் 3 மாதம் லைசன்ஸ் ரத்து : புதுவை கவர்னர் அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு சராசரியாக 13.5 பேர் உயிரிழக்கின்றனர். ஆனால், புதுவையில் ஒரு லட்சத்துக்கு 72 பேர் உயிரிழக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் விரைவாக செல்லக்கூடிய மக்கள் ஹெல்மெட் அணிவதில்லை. இதனால் பலர் தங்களது இன்னுயிரை இழக்கின்றனர். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்திய மோட்டார் வாகன சட்டம் புதுவையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவதுடன், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். எனவே, அவர்கள் 3 மாதங்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட முடியாது.


Tags : Governor , கவர்னர், அறிவிப்பு
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...